சேலம் அன்னதானப்பட்டி போலீசார் நேற்று இரவு மூனாங்கரடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த காளிதாஸ் மகன் தாமோதிரன் (வயது 25) என்பதும், அவர் கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் கருப்பூர் போலீசார் தேக்கம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள அரசு பள்ளி அருகே உள்ள ஒரு வீட்டில் மதுபானம் பதுக்கி விற்பது தெரிந்தது. இதையடுத்து வீட்டில் இருந்தவரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர் காவேரி (70) என்பதும், வீட்டில் மதுபானம் பதுக்கி விற்பனை செய்வதும் தெரிந்தது. இதையடுத்து முதியவரை போலீசார் கைது செய்தனர்.