தஞ்சாவூர் புது ஆற்றில் 2 ஆண் சடலங்கள் மீட்பு

கிரைம்;

Update: 2025-09-14 10:41 GMT
தஞ்சை புது ஆற்றில் 2 ஆண் பிணங்கள் கிடந்தன. இதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆண் பிணம் தஞ்சையை அடுத்த புதுப்படடினம் பகுதியில் உள்ள புது ஆறு எனப்படும் கல்லணைக்கால்வாயில் கிரீன்சிட்டி ஓட்டல் பின்புறம் அடையாளம் தெரியாத ஆண்பிணம் பிணமாக கிடந்தது. இது குறித்து தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கணேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது ஆற்றில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் அழுகிய நிலையில கிடந்தது. இதையடுத்து அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்..
தற்கொலையா? விசாரணை
இதே போல் தஞ்சையில் இருந்த வெட்டிக்காடு செல்லும் சாலையில் புது ஆற்றில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பவங்கள் குறித்து தஞ்சை தாலுகா போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? அவர்கள் தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது குளிக்கும் நீரின் வேகத்தில் அடித்துச்செல்லப்பட்டு இறந்தனரா? அல்லது தவறி விழுந்து இறந்தனரா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News