காவேரிப்பட்டணம் அருகே 2 குடிசைகள் எரிந்து சேதம்.

காவேரிப்பட்டணம் அருகே 2 குடிசைகள் எரிந்து சேதம்.;

Update: 2025-09-20 00:36 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகேயுள்ள ஜவான் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (40) விவசாயி. இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் முருகேசன் (32) இவர்கள் குடிசை வீடுகளில் உள்ளன. இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் வீடுகளை பூட்டிவிட்டு மாரியப்பன், முருகேசன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் விவசாய நிலத்திற்கு சென்றனர். சிறிது நேரத்தில் திடீரென குடிசைகள் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயற் சித்தனர். ஆனால் தீ கட்டுக்குள் வராததால் 2 குடிசைகளும் முற்றிலும் எரிந்தது. வீட்டில் இருந்த துணிமணிகள், ஆவணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் எரிந்து சேதமானது. இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News