வீடு புகுந்து ரூ.2 லட்சம் திருட்டு
சாணார்பட்டி அருகே வீடு புகுந்து ரூ.2 லட்சம் திருட்டு;
திண்டுக்கல் சாணார்பட்டி அடுத்த வேம்பார்பட்டி, கோட்டைமேடு தெருவை பகுதியை துரைப்பாண்டி மனைவி ஜனனி(29) இவர் தனது மாமனார்,மாமியார் மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பழனிச்சாமி மகன் பாண்டி நடராஜ் மகன்கள் கோபி சுரேஷ் ஆகியோர் அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடி, பீரோவில் இருந்த ரூ.2 லட்சம் பணத்தை திருடி எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர் என்று சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் சாணார்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.