ராயக்கோட்டை அருகே இருரண்டு தரப்பினர் மோதல்- 2 பேர் கைது.
ராயக்கோட்டை அருகே இருரண்டு தரப்பினர் மோதல்- 2 பேர் கைது.;
கிருஷ்ணகிரி ராயக்கோட்டை அருகேயுள்ள உள்ளுகுறுகுகை கீழ் தெரு பகுதியை சேர்ந்தவர் நரசிம்மா (35) பத்திர எழுத்தர். இதே பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (26). இவர்கள் உறவினர்கள். இவர்களுக்கு கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக இவர்களிடையே பிரச்சினை இருந்து வந்தது சம்வம் அன்று பிரச்சினையில் இரண்டு தரப்பை சேர்ந்தவர்களும் தாக்கி கொண்டனர். இதில் நரசிம்மா தரப்பில் 5 பேர் காயம் அடைந்தனர். இது பற்றி நரசிம்மா அளித்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீசார் வெங்கடேஷ் (26) உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் முனிஷ் (19) மற்றும் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்ட னர். இதேபோல மற்றொரு தரப்பில் மாலா என்பவர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் முனிராஜ் (38) உள்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து தலைமறைவானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.