திருச்செங்கோட்டை அடுத்த வெப்படை அருகே 2 கிலோ கஞ்சா விற்பனை செய்ய முயன்ற சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த ரெண்டு பேர் கைது

திருச்செங்கோட்டை அடுத்த வெப்படை அருகே வெளி மாநிலத்தைச் சேர்ந்தவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா வாங்கி விற்பனை செய்ய முயற்சி செய்த சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த விஜய் மற்றும் இளையராஜா ஆகியோரை கைது செய்து இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்து திருச்செங்கோடு மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நடவடிக்கை;

Update: 2025-10-18 13:29 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்துள்ள வெப்படை பகுதியில் சங்ககிரி ரோட்டில் உள்ள அம்மன் கோயில் பஸ் ஸ்டாப் அருகே கஞ்சா விற்பதாக திருச்செங்கோடு மதுவிலக்கு அமல் பிரிவு  போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அங்கு சென்று சோதனை ஈடுபட்ட திருச்செங்கோடு அமல்பரிவு  காவல் ஆய்வாளர் பிரபாவதி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் வெற்றிவேல் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் அங்கு சுற்றி திரிந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரித்த போது இரண்டு கிலோ 100 கிராம் கஞ்சாவை வாங்கி விற்பனை செய்ய முயற்சி செய்த ஆத்தூரை சேர்ந்த விஜய் 26 மற்றும் இளையராஜா 24 ஆகிய இருவரையும் திருச்செங்கோடு மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்து இரண்டு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் கூலித் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியான வெப்படை பகுதியில் இரண்டு இளைஞர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Similar News