திண்டுக்கல்லில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட 2 பேரை விலக்கி விட்ட வாலிபருக்கு பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கு 2 பேர் கைது
Dindigul;
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே AMC- ரோடு பகுதியில் டாஸ்மாக் கடை அருகே பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த விஜயராகவன்(29), பூபாலன்(30) ஆகிய இருவரும் குடிபோதையில் சாலையில் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பிரேம்குமார் விலக்கி விட்டதாக கூறப்படுகிறது இதில் ஆத்திரமடைந்த விஜயராகவன், பூபாலன் ஆகிய இருவரும் பிரேம்குமாரை பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு விஜயராகவன் மற்றும் பூபாலனை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்