தூத்துக்குடியில் 20 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் : வாட்ச்மேன் கைது
தூத்துக்குடியில் 20 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி வந்த தனியார் நிறுவன வாட்ச்மேனை போலீசார் கைது செய்தனர். ;
தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்ஜீவமணி தர்மராஜ், சப் இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், முகிலரசன், வடிவேல் தலைமை காவலர் ஜெகன் ஆகியோர் சுந்தர் நகர் பகுதியில்வாகன தணிக்கையில் ஈடுட்பட்டு கொண்டிருந்தபோது சந்தேகதிற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் கையில் பையுடன் வந்த நபரை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, கூல் லிப், புகையிலை போன்ற தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் சுமார் 20 கிலோ இருந்தது. பின்னர் போதை பொருட்களை பறிமுதல் செய்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் அவர் விருதுநகர் மாவட்டம் கள்ளிக்குடி சேர்ந்தவர் என்றும் அவர் முத்தையாபுரம் சுந்தர் நகரில் தங்கியிருந்து சிப்காட் வளாகத்தில் உள்ளஒரு கம்பெனியில் இரவு வாட்ச்மேன் ஆக வேலை பார்த்து இருக்கிறார் மேலும் பகல் நேரத்தில் புகையிலை வியாபாரமும் செய்து வந்துள்ளார் என்று தெரியவந்தது பின்னர் அவரை கைது செய்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.