முருகர் சிலை கும்பாபிஷேகம் -200 போலீசார் பாதுகாப்பு!

வேலூர் புதுவசூரில் உள்ள தீர்த்தகிரி மலையில் 92 அடி உயர முருகன் சிலைக்கு நாளை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.;

Update: 2025-06-07 16:54 GMT
வேலூர் புதுவசூரில் உள்ள தீர்த்தகிரி மலையில் 92 அடி உயர முருகன் சிலைக்கு நாளை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதில் வேலூர் மாவட்ட போலீசார் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி டிஎஸ்பி பிருத்திவிராஜ் சவுகான் தலைமையில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News