திருப்பத்தூரில் 200 கோடி மேலான வக்ஃபு வாரிய சொத்தை தனிநபர் மற்றும் தங்களுடைய சொந்த உறவினர்களுக்கு விற்பனை செய்த ‌ மூத்தவல்லிகள்! தொழிலதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு சொல்லி செய்த

திருப்பத்தூரில் 200 கோடி மேலான வக்ஃபு வாரிய சொத்தை தனிநபர் மற்றும் தங்களுடைய சொந்த உறவினர்களுக்கு விற்பனை செய்த ‌ மூத்தவல்லிகள்! தொழிலதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு சொல்லி செய்தியாளர்களுக்கு பேட்டி;

Update: 2025-07-18 11:12 GMT
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் 200 கோடி மேலான வக்ஃபு வாரிய சொத்தை தனிநபர் மற்றும் தங்களுடைய சொந்த உறவினர்களுக்கு விற்பனை செய்த ‌ மூத்தவல்லிகள்! தொழிலதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு சொல்லி செய்தியாளர்களுக்கு பேட்டி* திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கருப்பனூர் பகுதியைச் சேர்ந்த ஜானி பாஷா மகன் வாஜித் (43) தொழிலதிபர் இன்று அவருடைய அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில் திருப்பத்தூரில் உள்ள பூரா மசூதி, ஜமியா மசூதி, கும்மத் தர்கா, கோட்டை மசூதி மற்றும் ஈத்கா மசூதி, ஆகிய மசூதிகளுக்கு சொந்தமான வக்ஃபு சொத்துக்களை 1938 ஆம் ஆண்டிலிருந்து 2025 ஆண்டு தற்போது வரை முன்னாள் மற்றும் இந்நாள்‌ முத்தவள்ளிகள் தனி நபர்கள் மற்றும் தங்களுடைய உறவுமுறை சொந்தங்களுக்கு சுமார் 200 கோடிக்கு மேல் சொத்துக்களை விற்று உள்ளனர். இதனை கடந்த நான்கு மாதங்களாக தன்னுடைய வேலை வெட்டிகளை விட்டு சேகரித்துள்ளேன். இதன் காரணமாக என்னுடைய உயிருக்கு கூட ஆபத்து வரலாம் மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் முறைகேட்டில் ஈடுபட்ட மூத்தவல்லிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார் மேலும் தற்போது திருப்பத்தூரில் மட்டுமே சுமார் 200 கோடிக்கு மேல் விற்பனை செய்துள்ளனர் இதே திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் வக்ஃபு வாரிய சொத்தைகளை‌ சேகரித்தால் பல சொத்துக்கள் வெளியே வரும் எனவும் ‌கூறினார்.. பேட்டி; வாஜீத் தொழிலதிபர்

Similar News