அதிமுக கூட்டனி 200 தொகுதிகளை கைப்பற்றும்

மாநில அமைப்பு செயலாளர் தகவல்;

Update: 2025-08-11 11:48 GMT
குமரி மேற்கு மாவட்ட அதிமுக பத்மநாபபுரம் தொகுதி பொன்மனை பேருராட்சி பூத் நிர்வாகிகள் பட்டியல் ஆய்வு செய்யும் பணி பொன்மனையில் வைத்து நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜெயசுதர்ஷன் தலைமை தாங்கினார் . சிறப்பு விருந்தினராக மாநில அமைப்பு செயலாளரும், குமரி மேற்கு மாவட்ட பொறுப்பாளருமான சின்னத்துரை கலந்துக் கொண்டு பூத் நிர்வாகிகளின் பட்டியலை ஆய்வு செய்து பூத் நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். தொடர்ந்து அவர்  பேசியதாவது:-  2026 ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 200 தொகுதிகளை கைப்பற்றும் . கழக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்பார். திமுக ஆட்சி அமைந்தவுடன் 100 வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி தருவேன் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்து விட்டு இதுவரைக்கும் நிறைவேற்றவில்லை. தென்மாவட்டங்களில் கடந்த 2 மாதங்களில் படுகொலைகள் அதிகம் நடைபெற்று வருகிறது. அங்கன்வாடி மற்றும் சத்துணவு துறை ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய ஏற்பாடு செய்வேன் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு இதுவரைக்கும் நிறைவேற்றவில்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் அரசு ஊழியர்கள் திமுக அரசுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். என கூறினார்.

Similar News