பெரிய பள்ளிவாசலில் 2000 இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் 2000 இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை;

Update: 2025-06-07 05:52 GMT
திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில், இமாம் ரபீக் அகமது யூசுபி தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 2000க்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். தொழுகையின் முடிவில், பக்ரீத் பண்டிகையின் நடைமுறைகள் மற்றும் நன்மைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தொழுகையை நிறைவேற்றிய பின் இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் தங்களது வாழ்த்துக்களை கட்டித் தழுவி தெரிவித்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து, இறைவனுக்காக தங்களின் கடமையை நிறைவேற்றும் வகையில் ஆடுகளை அறுத்து அதன் இறைச்சிகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி தியாகத்திருநாள் கடமையை நிறைவேற்றினர். யூசூப்பியா நகர் , ஜின்னா நகர், பேகம்பூர், முகமதியாபுரம், நாகல் நகர், சந்துக்கடை, முவுன்ஸ்புரம், குள்ளனம்பட்டி உள்ளிட்ட நகரின் பல்வேறு பள்ளிவாசல்களில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு, தங்களது கடமைகளை நிறைவேற்றினர்.

Similar News