விஜய் 2014-ல் மோடிக்கு முன் பூனைக்குட்டி போல நின்றார் - கோவையில் நடிகர் ரஞ்சித் விமர்சனம் !
கோவை துடியலூரில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வல துவக்க விழாவில் நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டார்.;
கோவை துடியலூரில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வல துவக்க விழாவில் நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டார். அங்கு பேசிய அவர், மதுரையில் நடிகர் விஜய் கூறிய “பிழைப்புக்காக அரசியலுக்கு வரவில்லை” என்ற கருத்து குறித்து விமர்சித்தார். இதுபோன்ற வார்த்தைக்கு பொருத்தமானவர் நடிகர் கமல்ஹாசன் தான் என்றும் தெரிவித்தார். மேலும், 2014-ஆம் ஆண்டு கோவையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது, விஜய் “பூனைக்குட்டி போல் கையை கட்டிக்கொண்டு நின்றார்” என்றும் இன்று அதே பிரதமரை குறித்தே விமர்சனங்கள் செய்வது பொருத்தமல்ல என்றும் கேள்வி எழுப்பினார். அதேவேளை, இந்து முன்னணி அமைப்பு அன்பிற்காக இயங்கும் ஒன்றாகும்; அதிகாரம் அல்லது ஒப்பந்தம் பெறுவதற்காக அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். உலகமே இன்று பிரதமர் மோடியை வியந்து பார்ப்பதாகவும், “ஒரு வாக்காளராக எனக்கு தந்தை யார் என்றால் அது மோடி தான்” என்று நடிகர் ரஞ்சித் தெரிவித்தார்.