*இளம் விஞ்ஞானி இந்தியா 2024* விருது பெற்ற மாணவனுக்கு எம்எல்ஏ வாழ்த்து

குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் பங்கேற்று சிறப்புரை

Update: 2024-10-18 01:48 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா பஞ்சப்பட்டி, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் +2 பயிலும் ச.தினேஷ் என்ற மாணவன் காற்று உந்து விசையில் இயங்கும் Reusable Rocket Model செய்து, காற்று அழுத்தம் கொடுத்து இயக்கி காண்பித்தார். கிட்டத்தட்ட 20 அடி உயரம் சென்று ராக்கெட் உந்து விசையில் செயற்கைக்கோள் ராக்கெட்டில் இருந்து பிரிந்தது. பாராசூட் உதவியுடன் ராக்கெட் மாதிரியை மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் அற்புதமான செயல்விளக்கத்தை செய்துகாட்டிய மாணவனை குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் நேரில் நேற்று பாராட்டி, வாழ்த்தினார். மேலும் இளம் விஞ்ஞானி இந்தியா 2024 விருது பெற்ற யோகேஷ் என்ற +2 மாணவனுக்கு பரிசு வழங்கியும், பஞ்சப்பட்டி டூ ஸ்ரீஹரிகோட்டா சாதனை மலரை கரூர் மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் வழங்கினார்.

Similar News