கரூரில், 2025 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
கரூரில், 2025 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
கரூரில், 2025 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. கரூர்- கோவை சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான மூன்றாவது யோகா சாம்பியன்ஷிப் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் எல்கேஜி முதல் கல்லூரி வரை படிக்கும் மாணவ- மாணவியருக்கும், 25 வயது முதல் 35 வயதுக்கு மேற்பட்ட பொது பிரிவினருக்கும், எட்டு வயது முதல் 15 வயதுக்கு உட்பட்ட பொது பிரிவினருக்கும் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் முன்னோக்கி, பின் தங்கிய, முறுக்கு, கால் சமநிலை, கை சமநிலை என்ற ஐந்து பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் பங்கேற்ற மாணவ- மாணவியர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெறும் மாணவ - மாணவியருக்கு சான்றிதழ், கோப்பை மற்றும் பரிசுத்தொகை இன்று மாலை வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.