குடியரசு தின விளையாட்டு போட்டிகள் 2025-2026 நிறைவு விழா
குடியரசு தின விளையாட்டு போட்டிகள் 2025-2026 நிறைவு விழா;
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நீர் பெயர் ஊராட்சியில் அமைந்துள்ள டாக்டர் R.அருளப்பா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் மதுராந்தகம் குரு வட்டத்தின் பாரதியார் மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டிகள் 2025-2026 நிறைவு விழா இன்று 11.8.2025 நடைபெற்றது.. இந்த விளையாட்டு போட்டியில் சிறப்பு விருந்தினராக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்து கொண்டு தேசியக்கொடி மற்றும் ஒலிம்பிக் தீபம் ஏற்றி, உறுதிமொழி எடுத்து விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.. இந்நிகழ்வின் போது மதுராந்தகம் ஒன்றிய குழு உறுப்பினர் K.கீதா கார்த்திகேயன், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் V.கார்த்திகேயன், நீர் பெயர் ஊராட்சி மன்ற தலைவர் M.சீதா மோகன கிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் அன்புசெல்வன், ஒன்றிய கழக நிர்வாகிகள், மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரிய பெருமக்கள் மற்றும் மதுராந்தகம் மற்றும் செய்யூர் பகுதிகளில் உள்ள மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..