பெண்ணிடம் ரூ.21லட்சம் மோசடி: தனியார் கைப்பேசி நிறுவன முகவர் கைது

பெண்ணிடம் ரூ.21லட்சம் மோசடி செய்த தனியார் கைப்பேசி நிறுவன முகவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-11-23 18:10 GMT
வாலிபர் கைது
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தஞ்சாவூரில் பெண்ணிடம் போலியான ஒப்பந்த ஆவணத்தைக் கொடுத்து ரூ.21.06 லட்சம் மோசடி செய்ததாக தனியார் கைப்பேசி நிறுவன முகவரைக் காவல் துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் முகமது அலி மகன் பைசல் அகமது (25).

இவர் தனியார் கைப்பேசி நிறுவனத்தின் இணையதள இணைப்புகள் வழங்கும் முகமையை நடத்தி வந்தார். இவர் தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் முதல் ஞானம் நகர் வரை இணையதள இணைப்புகள் கொடுப்பதற்கான முகமையைப் பெற்றுத் தருவதாகவும், அதன் மூலம் நிறைய லாபம் கிடைக்கும் எனவும் மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்துக்குள்பட்ட செந்நகரம்பட்டியைச் சேர்ந்த தமிழன்பன் மனைவி திவ்யாவிடம் (28) கூறினார்.

Advertisement

இதைத் தொடர்ந்து, திவ்யாவிடம் வங்கி பரிவர்த்தனை மூலம் 2021, ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் நிகழாண்டு மார்ச் 30 வரை பல்வேறு தவணைகளில் பைசல் அகமது ரூ. 21.06 லட்சம் வாங்கி, திவ்யாவிடம் தனியார் நிறுவன பெயர் பொறிக்கப்பட்ட ஒப்பந்த ஆவணத்தை வழங்கினார். இதன் பின்னர் திவ்யா பல முறை முயன்றும் பைசல் அகமதுவை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து திவ்யா தொடர்புடைய நிறுவனத்திடம் பைசல் அகமது வழங்கிய ஒப்பந்த ஆவணத்தைக் காட்டியபோது,

அது போலியானது என்பது தெரிய வந்தது. இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட குற்றப் பிரிவில் திவ்யா அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து பைசல் அகமதுவை  கைது செய்தனர்.

Tags:    

Similar News