ஆற்காட்டில் 210 கிலோ கஞ்சா-3 கார்கள் பறிமுதல்!

வெளிமாநிலத்தில் இருந்து கடத்தி வந்த 210 கிலோ கஞ்சா, 3 கார்கள் பறிமுதல்;

Update: 2025-04-02 04:19 GMT
  • whatsapp icon
அற்காட்டில் வெளிமாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 210 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தமிழ்நாட்டிற்கு கடத்தி வருவதாக ராணிப்பேட்டை மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 30-ந் தேதி ஆற்காடு டவுன் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் காரில் கடத்தி வந்த 30 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதனை கடத்தி வந்ததாக ராணிப்பேட்டையை சேர்ந்த குமரேசன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த நிலையில் நேற்று மாலை ஆற்காடு டவுன் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் வெளி மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 120 கிலோ கஞ்சா மற்றும் அதற்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். அதனை கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த குப்தா சரண் சாகு, சுதிர் அல்பேரியா, தேபப்ரதாதாஸ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அதேபோன்று ஆற்காடு தாலூகா போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் வெளிமாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 60 கிலோ கஞ்சா மற்றும் அதற்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்து, அதனை கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரெலிமஜி, கவுரப் திருப்பிடிகா ஆகிய 2 பேரை கைது செய்தனர்.இந்த 3 சம்பவங்களிலும் 210 கிலோ கஞ்சா. 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 6 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Similar News