ராசிபுரம் நகராட்சியில் வார்டு எண் 21,23, பகுதிக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது..

ராசிபுரம் நகராட்சியில் வார்டு எண் 21,23, பகுதிக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது..;

Update: 2025-09-23 15:58 GMT
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சியில் வார்டு எண் 21 மற்றும் 23 அங்காளம்மன் கோவில் தெருவில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், கலந்து கொண்டு பொதுமக்களிடத்தில்‌ அரசின் திட்டங்கள் குறித்து எடுத்து கூறி பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கி சிறப்பித்தார். இம்முகாமில் பட்டா பெயர் மாற்றம், மின்சார சேவை, இ சேவை, மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். இதில் மின் இணைப்பு பெயர் மாற்றம், பட்டா பெயர் மாற்றம், புதிய குடிநீர் இணைப்பு உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு உடனடியாக வழங்கப்பட்டது. உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமில் கலந்து கொண்டு, மக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, தீர்வுகாணப்பட்ட விண்ணப்பங்களுக்கு ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கி, வாழ்த்துரை நிகழ்த்தினார் . மற்ற மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் N.R. சங்கர், நகர மன்ற தலைவர் கவிதா சங்கர் மாமன்ற உறுப்பினர்கள் நாகேஸ்வரன், ஆனந்தன், சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் வருவாய்த்துறையினர், மின்சார வாரியத் துறையினர், பேரூராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News