விழுப்புரத்தில் 22ம் தேதி விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு;
விழுப்புரம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் வரும் 22ம் தேதி நடக்கிறது.விழுப்புரம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்:-விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் வரும் 22ம் தேதி காலை 11:00 மணியளவில் ஆர்.டி.ஓ., தலைமையில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது. இதில், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானுார், திருவெண்ணெய்நல்லுார் மற்றும் கண்டாச்சிபுரம் தாலுகாக்களுக்குட்பட்ட விவசாயிகள் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.