ஒசூரில் 22 சவரன் நகை திருடிய பெண் கைது.
ஒசூரில் 22 சவரன் நகை திருடிய பெண் கைது.;
கிருஷ்ணகிரி மவட்டம் ஒசூா் அருகே உள்ள சென்னத்தூா் பகுதியை சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் மனைவி மஞ்சுளா (53)ஆகிய இவர்களது வீட்டில் 22 சவரன் தங்க நகைகள் திருட்டு போனது குறித்து ஒசூா் மாநகர காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார் அதன்பேரில் ஒசூா் மாநகர போலீசார் அவரது வீட்டில் இருந்த சிசிடிவி கேமராiவ ஆய்வு செய்ததில் மஞ்சுளா வீட்டின் தோழியான பார்வதம்மாள் (52) மஞ்சுளாவின் வீட்டில் வைத்திருந்த 22 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதை அடுத்து, பார்வதம்மாவை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 22 பவுன் நகைகளை மீட்டனா்.