சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் 23 லட்சம் மதிப்பு மின்சாதனங்கள் பறிமுதல் !

விமான நிலையத்தில் 23 லட்சம் மதிப்பு மின்சாதனங்கள் கைப்பற்றப்பட்டது.;

Update: 2025-09-06 06:01 GMT
கோவை சர்வதேச விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து வந்த ஸ்கூட் விமானத்தில் மூன்று பயணிகள் மூலம் கடத்தப்பட்ட 77 ட்ரோன்கள் மற்றும் மின்சாதன பொருட்கள் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் வெளிப்பட்ட இப்பொருட்களின் மதிப்பு ரூ.23 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மூன்று பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News