தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நடைபெறும் 24 மணி நேர தர்ணா போராட்டம்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2025-02-10 14:12 GMT
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் 24 மணி நேர தர்ணா போராட்டமானது நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் புதிய பென்ஷன் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் காலியாக உள்ள அரசு பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் 24 மணி நேர காத்திருப்பு தர்ணா போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மாநில, மாவட்ட குழு உறுப்பினர்கள் ஏராளமான ஒரு கலந்து கொண்டு அரசு உடனடியாக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News