ஆண்டிமடத்தில் ஜமாபந்தி 24 மனுக்கள் உடனடி தீர்வு
ஆண்டிமடத்தில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில் 24 மனுக்கள் உடனடி தீர்வு காணப்பட்டது.;
அரியலூர். மே.20- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டத்திற்கான 1434 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்ப்பாயம் ஜமாபந்தி நேற்று துவங்கியது. ஆண்டிமடம் வட்டம் ஆண்டிமடம் உள் வட்டத்தில் உள்ள ஓலையூர், ஆத்து குறிச்சி, ஸ்ரீ ராமன், ராங்கியம், சிலுவைச்சேரி, அழகாபுரம், ஆண்டிமடம், விளந்தை, வரதராஜன் பேட்டை, பெரிய கிருஷ்ணாபுரம், திருக்களப்பூர், அணிக்குதிச்சான் ஆகிய கிராமங்களுக்கான ஜமாபந்தி நேற்று உடையார்பாளையம் ஆர்டிஓ ஷீஜா தலைமையில் நடைபெற்றது. ஆண்டிமடம் தாசில்தார் ராஜமூர்த்தி மற்றும் வருவாய் ஆய்வாளர் அரசு கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர். நேற்று பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டு மனை பட்டா, உதவித்தொகை, சிட்டா நகல், உட்பிரிவு அளந்து அத்து காட்டல், குடும்ப அட்டை மற்றும் சான்றுகள் கேட்டு 204 பேர் மனுக்கள் அளித்திருந்தனர். இவற்றில் 24 மனுக்கள் உடனடியாக தீர்வு காணப்பட்டது. 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மீதமுள்ள 174 மனுக்கள் விசாரணையில் உள்ளன. இன்று 21ஆம் தேதி குவாகம் உள் வட்டத்தில் உள்ள சிலம்பூர், இடையக்குறிச்சி, அய்யூர், கூவத்தூர், காட்டாத்தூர், குவாகம், கொடுக்கூர், வாரியங்காவல், தேவனூர், இலையூர், மேலூர் ஆகிய கிராமங்களுக்கான ஜமாபந்தி இன்று நடைபெறுகிறது.