போக்குவரத்து விதியை மீறிய 25 பேர் மீது வழக்குபதிவு

அரூரில் போக்குவரத்து விதியை மீறிய 25 இளைஞர்கள் மீது வழக்கு பதிவு;

Update: 2025-04-16 07:02 GMT
அரூரில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி நேற்று முன்தினம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையொட்டி அரூர் காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இரவில் அரூர் கடைவீதி வழியாக 25 இளைஞர்கள் கச்சேரி மேடு வரை இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக செல்ல புறப்பட்டனர். காவலர்களிடம் உரிய முன் அனுமதி பெறாமல் ஊர்வலமாக செல்லக்கூடாது என்று இளைஞர்களிடம் காவலர்கள் கூறினார்கள். ஆயினும் அதை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் கச்சேரிமேடு வரை ஊர்வலமாக சென்றனர். இதனையடுத்து போக்குவரத்து விதியைமீறியதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் ஊர்வலமாக சென்ற 25 பேர் மீது அரூர் காவலர்கள் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News