இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 25 ஆயிரம்  அபராதம்

நாகர்கோவில்;

Update: 2025-09-02 15:59 GMT
குமரி மாவட்டம்  திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த அன்வர் உசைன் என்பவர் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு தொடங்கி பணம் செலுத்தி வந்துள்ளார்.  சம்பவத்தன்று நாகப்பட்டினம் செல்லும் போது பஸ்சில் நெஞ்சுவலி ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மருத்துவ செலவு ரூ.61 ஆயிரத்து 372 வந்துள்ளது. இந்த தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கவில்லை.  இது குறித்து குமரி நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அன்வர் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரித்த ஆணைய தலைவர் அபராதம் ரூ. 25 ஆயிரம்,  மருத்துவத் தொகை 6.5% வட்டியுடன் வழங்க உத்தரவிட்டார்.

Similar News