ஜே.கே.கே.முனிராஜா ஆக்குபேசனல் கல்லூரியின் 25-வது ஆண்டு வெள்ளி விழா

குமாரபாளையம் ஜே.கே.கே.முனிராஜா ஆக்குபேசனல் கல்லூரியின் 25-வது ஆண்டு வெள்ளி விழா மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது;

Update: 2025-11-11 10:40 GMT
ஜே.கே.கே. முனிராஜா ஆராய்ச்சி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் செயல்முறை மருநத்துவ கல்லூரி அக்டோபர் 30 மற்றும் 31 அன்று தனது 25-வது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு சிறப்பாக கொண்டாடியது. இந்த வெள்ளி விழாவின் முக்கிய நிகழ்வாக ஆக்குபேஷனல் தெரபி மறுவாழ்வு முறை என்ற தலைப்பின் கீழ் சர்வதேச மாநாடு நடைப்பெற்றது. இந்த மாநாட்டின் சிறப்பு விருந்தினர்களாக Dr. பங்கஜ்பாஜ்பாய் அனைத்திந்திய ஆக்குபேஷனல் தெரபி சங்கத் தலைவர் மற்றும் Dr. ஜோதிகா நான் பிஜ்லானி தலைவர்இயல் முறை மருத்துவமனையில் கல்வி குழு ஆகியோர் பங்கேற்றனர். மேலும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளிலுள்ள ஆக்குபேசனல் தெரபிஸ்ட்கள் மற்றும் ஆக்குபேசனல் தெரபி மருத்துவ மாணவர்கள், 1200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மும்பை, டெல்லி, அபுதாபிலிருந்து சிறப்பு மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார் இரண்டு நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் மாணவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள், மற்றும் ஆக்குபேசனசல் தெரபி புத்தகம் ஆகியவை வெளியிடப்பட்டது. மாணவர்களுக்கு சிறப்புப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த வெள்ளிவிழாவின் சர்வதேச மாநாட்டை ஜே.கே.கே. முனிராஜா மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளையின் தாளாளர் மற்றும் நிறுவனர் திருமதி. வசந்தகுமாரி முனிராஜா அம்மா அவர்கள் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் திரு. ஜே.கே.எம். ஜெயப்பிரகாஷ் ஐயா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். விழாவின் சிறப்பு விருந்தினராக Dr. பங்கஜ் பிஜ்வா பாய் AIOTA அவர்கள் மெடிக்கல் கவுன்சில் பற்றி குறிப்பிட்டார். முழுமையான நல்வாழ்வில் ஆக்குபேசனல் தெரபியின் பங்கு பற்றியும் விரிவுரையாற்றினார். மேலும் இந்த சர்வதேச மாநாட்டின் ஒரு பகுதியாக 29.10.2025 அன்று மாநாட்டிற்கு முந்தைய பயிலரங்கத்தை நடத்தியது குறிப்பிடதக்கது. அபுதாபி STMC மருத்துவமனையை சேர்ந்த சீனியர் ஆக்குபேசனல் தெரபிஸ்ட்டுகள் 4 தலைப்புகளில் 4 அரங்குளில் செயல்முறை பயிற்சியுடன் கல்வி பயிலரங்கத்தை சிறப்பாக நடத்தினர். மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்த மாநாட்டை ஜே.கே.கே. முனிராஜா ஆக்குபேசனல் தெரபி யின் முதல்வர் திரு. T. ஜெகதீசன் அவர்கள் சிறப்பாக வழி நடத்தினார். மேலும் ஜே.கே.கே. ஆக்குபேசனல் தெரபி கல்லூரியின் நிறுவனர்களான திரு. ஜே.கைலாஷ் ராஜா . திரு. கரண் ராஜா மற்றும் செல்வி.ஸ்ரீநித்யா ஆகியோரும் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். ஜே.கே.கே. ஆக்குபேனசல் தெரபி கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பும் நிகழ்வின் ஒரு பகுதியாக நடைப்பெற்றது. நிகழ்வின் இறுதியில் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜே.கே.கே. ஆக்குபேனசல் தெரபி கல்லூரியின் துனை முதல்வர் திருமதி. ரேணுசித்ரா அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துரை வழங்கினார். விழா இனிதே நிறைவுற்றது. ஜே.கே.கே.முனிராஜா ஆக்குபேசனல் தெரபி 25-வது ஆண்டு வெள்ளி விழா முன்னிட்டு கல்வி பயிலரங்கம் ஜே.கே.கே. முனிராஜா மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஆக்குபேசனல் தெரபி கல்லூரி தனது 25-ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு மாநாட்டிற்கு முந்தைய கல்விப் பயிலரங்கத்தை நடத்தியது. இந்த செயல்முறை பயிலரங்கமானது நான்கு அரங்குகளில் நடைபெற்றது.அரப எமிரேட் டை சார்ந்த மூத்த இயன் முறை மருத்துவர். மெக்தாத் ஹம்சத். மாற்று திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி என்ற தலைப்பிலும் , மன்சூர் முஸ்தபா வரமங்கல்த், STMC - UAE இல் மூத்த பேச்சு மொழி நோயியல் நிபுணர் அவர்கள் டிஸ்ஃபேஜியா மேலாண்மை என்ற தலைப்பிலும் திருமதி சௌலா பதியானி, குழந்தைகளுக்கான ரீச் தெரபி மையத்தின் நிறுவனர் மற்றும் மருத்துவ இயக்குநர். அவர்கள் Sensory Integration என்ற தலைப்பிலும் திரு. ஸ்ரீனிவாசன் சண்முகம், STMC- UAE-ல் மேற்பார்வையாளர் பிசியோதெரபிஸ்ட்.- அவர்கள் வெஸ்டிபுலர் மறுவாழ்வு என்ற தலைப்பிலும் பயிலரங்கத்தை வழி நடத்தினர். இந்த பயிலரங்கத்தில் மாணவர்களுக்கு செயல்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டடின் அனைத்து ஆக்குபேசனல் தெரபி கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர். ஜே.கே.கே. முனிராஜா மெடிக்கல் ரிசர்ச் பவுண்டேசன் கல்லூரியின் தாளாளர் திருமதி. வசந்தகுமாரி முனிராஜா அம்மா அவர்கள் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் திரு. ஜே.கே.எம். ஜெயப்பிரகாஷ் ஐயா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இதில் ஜே.கே.கே. முனிராஜா அறக்கட்டளையின் கீழ் இயங்கும் அனைத்துக் கல்லூரி முதல்வர்களும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். இந்த பயிலரங்கம் தங்களின் கற்றல் மற்றும் பயிற்சித் திறனை மேம்படுத்துவதாக அமைந்தது என மாணவர்கள் தெரிவித்தனர். இறுதியில் மாணவ, மாணவியர்க்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. ஜே.கே.கே. முனிராஜா ஆக்குபேசனல் தெரபி கல்லூரியின் முதல்வர் திரு. T. ஜெகதீசன் அவர்கள் நன்றியுரை கூறி விழாவை நிறைவு செய்தார்

Similar News