பூ மிதி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் 2500 பேருக்கு அன்னதானம்
எடப்பாடி ஸ்ரீ மேட்டு மாரியம்மன் பண்டிகை முன்னிட்டு பூ மிதி பக்தர்களுக்கு ஸ்ரீ வெற்றி விநாயகர் சிறு சேமிப்பு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம் எடப்பாடி ஸ்ரீ மேட்டு மாரியம்மன் பண்டிகையை முன்னிட்டு பூ மிதி பக்தர்கள் 2500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சேலம் மாவட்டம் எடப்பாடி மேட்டு தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மேட்டு மாரியம்மன் பண்டிகை வருடம் வருடம் ஆடி மாதத்தில் நடைபெறுவது வழக்கம், அதேபோன்று இந்த ஆண்டும் ஆடி மாதம் முதல் வாரத்தில் பூச்சாட்டுகளுடன் தொடங்கி தினந்தோறும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள் வியாழக்கிழமை காலை ஸ்ரீ மேட்டு மாரியம்மன்க்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பூ மிதிக்க உள்ள நிலையில் இன்று மாரியம்மன் கோவிலில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள் மற்றும் பெண்கள் கங்கணம் கட்டிக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து பூமிதி பக்தர்களுக்கு ஸ்ரீ வெற்றி விநாயகர் சிறு சேமிப்பு குழு சார்பாக 16ஆம் ஆண்டாக 2500 பேருக்கு அன்னதானமான வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த பின்னர் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று அன்னதானத்தை வாங்கிச் சென்றனர்.