விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 256 இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் (விஜர்சனம்) நீரில் கரைக்க திருச்சி காவிரி ஆற்றுக்கு ஊர்வலம்
பெரம்பலூர் நகரப் பகுதியில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்;
பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 256 இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் (விஜர்சனம்) நீரில் கரைக்க திருச்சி காவிரி ஆற்றுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியான 27ம் தேதி அன்று பெரம்பலூர் நகர் மட்டுமின்றி மாவட்டத்தில் பெரம்பலூர், வி.களத்தூர, லப்பைக்குடிக்காடு, வேப்பந்தட்டை, குன்னம் , ஆலத்தூர் உள்ளிட்ட 121 கிராம ஊராட்சிகள், மற்றும் குக் கிராமங்கள் என மொத்தம் 256 இடங்களில் பல்வேறு வடிவிலான விநாயகர்சிலைகள் வைக்கப்பட்டு அவற்றுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. இவ்வாறு சிலைகள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு காவல் துறையின் மூலம் பாதுகாப்புபோடப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வந்தது. நிறைவு நாளான இன்று மாலை சிலைகள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஒன்றன் பின் ஒன்றாக அதன் அமைப்பாளர்கள் மூலம் பாதுகாப்புடன் வாகனங்கள் மூலம், மேளதாளங்கள் மற்றும் வான வேடிக்கையுடன் திருச்சி காவிரி ஆற்றிற்குஎடுத்துச் சென்று கரைக்கப்பட்டது, இதற்கான பாதுகாப்பு பணியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.