சேலத்தில் 26-ந்தேதி மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்
அமைச்சர் ராஜேந்திரன் தகவல்;
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ஆர்.ராஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சேலம் கிழக்கு, சேலம் மத்திய, சேலம் மேற்கு மாவட்டம் என 3 மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள கே.எம்.பி. திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதற்கு தி.மு.க. உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினர் எ.வ.வேலு தலைமை தாங்குகிறார். எனவே இந்த கூட்டத்தில் 3 மாவட்டத்தை சேர்ந்த தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், அனைத்து சார்பு அணியினர், மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும். அதே போன்று மாவட்டத்தில் உள்ள அணிகளின் மாநில துணைச்செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.