காஞ்சிபுரத்தில் வரும் 26ல் வேலை வாய்ப்பு முகாம்
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரியில், வரும் 26ம் தேதி, வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்;
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரியில், வரும் 26ம் தேதி, வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திகுறிப்பு: படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகம், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மகளிர் திட்டம் இணைந்து பெரிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், காஞ்சிபுரம், பச்சையப்பன் ஆடவர் கல்லுாரியில், வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. இம்முகாமில், 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று, நேர்முக தேர்வு நடத்த உள்ளன. பட்டதாரிகள், டிப்ளமோ, ஐடிஐ., பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர். வயது 18 - 35 வரை உள்ள வேலை தேடுவோர் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் வரும் 26ம் தேதி, காலை 9:00 மணிக்கு, காஞ்சிபுரம், பச்சையப்பன் ஆடவர் கல்லுாரிக்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம். மேலும், விபரங்களுக்கு 044--27237124 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.