பெரம்பலூரில் வரும் 26 தேதி சனிக்கிழமை அன்று முழு உடல் தான பதிவு முகாம்

26-07-2025 சனிக்கிழமை அன்று முகாம் நடைபெறுகிறது. முகாமில் பதிவு செய்ய விரும்புவோர் தங்களது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்-2, ஆதார் அட்டை நகலுடன் வருகை தர வேண்டுகிறோம்.;

Update: 2025-07-24 02:02 GMT
பெரம்பலூரில் வரும் சூலை 26 சனிக்கிழமை அன்று உடல் தான பதிவு முகாம் நடைபெற்றது. பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் அறக்கட்டளை மற்றும் பெரம்பலூர் ஆற்றும் கரங்கள் அறக்கட்டளை இணைந்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அஸ்வின்ஸ் வளாகம் விருஷக மஹாலில் பெரம்பலூர் இலக்கிய வட்டம் வழங்கும் செகாவ் விருது நிகழ்வில் வரும் 26-07-2025 சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை முழு உடல் தான பதிவு முகாம் நடைபெறுகிறது என அறக்கட்டளையின் தலைவர் நா.ஜெயராமன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார். முழு உடல் தானம் என்பது ஒருவர் இயற்கை எய்திய பின் குடும்ப உறவினர்களால் உடலை இடுகாட்டில் அடக்கம் செய்யவோ அல்லது சுடுகாட்டில் தகனம் செய்யவோ விரும்பாமல் மருத்துவ கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சி படிப்பு படிப்பதற்காக உதவிடும் ஒரு செயல் ஆகும். இதற்காக உயிருடன் இருக்கும் போது ஒருவர் தமது குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதலோடு முழு உடல் தானம் செய்ய அரசு மருத்துவ கல்லூரிக்கு முறையே விருப்பம் தெரிவித்து உரிய ஆவணங்களுடன் படிவம் வழங்கிட வேண்டும். இதற்காக 26-07-2025 சனிக்கிழமை அன்று முகாம் நடைபெறுகிறது. முகாமில் பதிவு செய்ய விரும்புவோர் தங்களது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்-2, ஆதார் அட்டை நகலுடன் வருகை தர வேண்டுகிறோம். இதேபோல் முழு உடல் தானத்திற்காக பதிவு செய்யாத ஒருவர் இயற்கை எய்திய நிலையில் குடும்ப உறுப்பினர்கள் சம்மதம் தெரிவிக்கும் போது இறந்த 6 மணி நேரத்திற்குள் உடலை தானம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் அறக்கட்டளை பொறுப்பாளர்கள் மகேஸ்குமரன், உதிரம் நாகராஜ் மற்றும் பெரம்பலூர் ஆற்றல் கரங்கள் அறக்கட்டளை பொறுப்பாளர் அருண் ஆப்ரஹாம் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Similar News