திருப்பூர் எல். ஆர். ஜி அரசு மகளிர் கல்லூரியில் 26 வகுப்பறை கட்டிடங்கள் உள்பட ரூ. 1.91 கோடி மதிப்பில் பணிகள்!
திருப்பூர் எல். ஆர். ஜி மகளிர் அரசு கலைக் கல்லூரியில் 26 வகுப்பறை கட்டிடங்கள் உள்பட ரூ. 1.91 கோடி மதிப்பிலான பணிகளை செல்வராஜ் எம். எல். ஏ தொடங்கி வைத்தார்.
எல்.ஆர்.ஜி. கல்லூரியில் 28 வகுப்பறை கட்டிடங்கள் உள்பட ரூ.1.91 கோடி மதிப்பில் பணிகள் செல்வராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார் திருப்பூர், எல்.ஆர்.ஜி. கல்லூரியில் 28 வகுப்பறை கட்டிடங்கள் உள்பட ரூ.1.91 கோடி மதிப்பிலான பணிகளை செல்வராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்கல்லுரியில் கூடுதலாக 28 வகுப்பறைகள், 12 ஆய்வகங்கள், பல்நோக்கு திறந்தவெளி அரங்கம், காங்கிரீட் சாலை அமைத்தல், விளையாட்டு மைதானம் மற்றும் தண்ணீர் வசதிகளை மேம்படுத்தும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமிபூஜை ரூ.1 கோடியே 91 லட்சம் மதிப்பில் நேற்று கல்லூரியில் நடைபெற்றது. இதனை செல்வராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இதில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன் மற்றும் பகுதி செயலாளர்கள் மு.க.உசேன் அய்யப்பன்; மற்றும் நந்தினி மற்றும் கவுன்சிலர் கணேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கல்லுரி பேராசிரியர்கள் மேலும் கல்லூரியில் தேவைப்படுகிற சில வசதிகள் குறித்து செல்வராஜ் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். அவர் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக