மத்திய அரசு திருத்திய 3 சட்ட நகலை எரித்து போராட்டம்
மத்திய அரசு மூன்று சட்டங்களை திருத்தியதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பாக சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரில் வெள்ளையனே வெளியேறு போராட்ட தினத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் திடீரென்று தாங்கள் வைத்திருந்த குற்றவியல் சட்ட நகலை எரித்தனர். போலீசார் நகலை தொடர்ந்து எரிக்க விடாமல் தடுத்து எரிந்து கொண்டிருந்த நகலின் மீது தண்ணீரை ஊற்றி அணைத்தனர். இச்சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.