தொழிலாளியை வெட்டியவருக்கு 3 ஆண்டு சிறை

பத்மநாபபுரம் கோர்ட் தீர்ப்பு

Update: 2024-08-31 14:34 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள தும்பக்கோடு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (65)தொழிலாளி. இவருடைய வீட்டில் இருந்த சைக்கிளை அதே ஊரை சேர்ந்த பால்ராஜ் (52) என்பவரின் தம்பி திருடிவிட்டதாக கணேசன் கூறியுள்ளார். இது தொடர்பாக தகராறு ஏற்பட்டு,  முன் விரோதம் காரணமாக கடந்த 3 - 9 -  2002 அன்று நண்பகல் 12 மணிக்கு தும்பகோடு பஸ் நிறுத்தத்தில் நடந்து சென்று கொண்டிருந்த கணேசனை வழிமறித்து பால்ராஜ் அறிவாளால் வெட்டி உள்ளார்.        இதில் படுகாயம் அடைந்த அவர்குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார் . மேலும் இது குறித்த புகார் என் பேரில் குலசேகரம் போலீசார் பால்ராஜ் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.       இது தொடர்பான வழக்கு பத்மநாபபுரம் கோர்ட்டில் கடந்த 22 வருடங்களாக நடந்து வந்தது.  இந்த வழக்கை நேற்று இறுதி விசாரணை செய்த நீதிபதி பிரவீன் ஜீவா குற்றம் சாட்டப்பட்ட பால்ராஜை குற்றவாளி என  அறிவித்து அவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

Similar News