கொலை வழக்கில் 3 பேர் மீது குண்டாஸ்
திண்டுக்கல்லில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது
திண்டுக்கல் தோமையார்புரம் அருகே கடந்த மாதம் 9-ம் தேதி பாலமுருகன்(39) என்பவரை கொடூரமாக கொலை செய்த வழக்கில் ஜஸ்டின்ராஜ்(27), லியோசார்லஸ்(32), பன்னீர்செல்வம்(28) உள்ளிட்ட 8 பேரை தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஜஸ்டின்ராஜ், பன்னீர்செல்வம், லியோசார்லஸ் ஆகிய 3 பேரின் குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் எஸ்பி.பிரதீப் பரிந்துரையின் பேரில் கலெக்டர் பூங்கொடி,3பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து DSP. சிபிசாய்சௌந்தர்யன் தலைமையில் தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.