கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த 3 பேர் கைது

திண்டுக்கல் அருகே கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த 3 பேர் கைது, ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள 115 மதுபான பாட்டில்கள் பறிமுதல்

Update: 2025-01-06 05:37 GMT
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் அருண்நாராயணன், கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சிறுமலை புதூர் பகுதியில் அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த பூவேதா மற்றும் சிறுமலை பழையூர், அண்ணா நகர் பகுதியில் மதுபானம் விற்பனை செய்த தங்கப்பாண்டி, A.வெள்ளோடு தண்டல்காரன்பட்டி பிரிவு பகுதியில் மதுபானம் விற்பனை செய்த சன்ஜீவன் ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள 115 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News