கோத்தகிரியில் கிணற்றுக்குள் விழுந்த கரடிகள் 3 மணி நேரத்திற்கும் மேலாஉயிருக்கு போராடி தத்தளித்தன.....

கோத்தகிரியில் கிணற்றுக்குள் விழுந்த கரடிகள் 3 மணி நேரத்திற்கும் மேலாஉயிருக்கு போராடி தத்தளித்தன.....;

Update: 2025-01-18 11:04 GMT
கோத்தகிரியில் கிணற்றுக்குள் விழுந்த கரடிகள் 3 மணி நேரத்திற்கும் மேலாஉயிருக்கு போராடி தத்தளித்தன..... வனத்துறையினர் கிணற்றுக்குள் ஏணியை வைத்துவுடன் இரண்டு கரடிகளும் கிணற்றிலிருந்து வெளியே வந்து வனப்பகுதிக்குள் ஓடின ...... நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது குறிப்பாக பகல் நேரங்கள் மட்டுமல்லாமல் இரவு நேரங்களிலும் கரடிகள் உணவு தேடி ஊருக்குள் உலா வருகின்றன இந்த நிலையில் கோத்தகிரி ஜக்கனாரை ஊராட்சிக்குட்பட்ட தும்பூர் பகுதியில் குடிநீர் கிணற்றுக்குள் இரண்டு கரடிகள் தவறி விழுந்தது கிணற்றுக்குள் விழுந்த கரடிகள் நீண்ட நேரம் சத்தமிட்டன இதையடுத்து அப்பகுதி மக்கள் கிணற்றுக்குள் சத்தத்தை கேட்டு எட்டிப் பார்த்தபோது இரண்டு கரடிகள் கிணற்றுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பின்பு சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரகர் செல்வராஜ் , வனவர் குமார் தலைமையிலான பத்து பேர் கொண்ட வனத்துறையினர் கிணற்றுக்குள் விழுந்த கரடிகளை மீட்க போராடினர் சுமார் மூன்று மணி நேரம் கழித்து கிணற்றுக்குள் விழுந்த கரடிகளை ஒரு மணி நேரத்திற்கு பின்பு பெரிய ஏணியை கிணற்றுக்குள் வைத்தவுடன் இரண்டு கரடிகளும் மெதுவாக ஏணி வழியாக ஏறி வெளியே வந்து பின்பு வனப்பகுதிக்கு ஓடின இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது கிணற்றுக்குள் விழுந்த இரண்டு கரடிகளை வனத்துறையினர் ஏணி மூலம் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்ட செயல் பாராட்டைப் பெற்றது ஆனால் இப்பகுதியில் உள்ள குடிநீர் கிணற்றுக்கு மேல் மூடி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில் கிணற்றுக்கு மேல் மூடி வைக்கப்படாததால் இன்று இரண்டு கரடிகள் விழுந்து உயிர் தப்பியுள்ளன இரவு நேரத்தில் வனவிலங்குகள் விழுந்திருந்தால் அந்தத் தண்ணீரை கிராம மக்கள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டிருக்கும் தற்போது பகல் நேரம் என்பதால் கரடிகள் விழுந்தது தெரியவந்தது என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் மேலும் கரடிகள் விழுந்ததால் குடிநீர் கிணற்றை தூய்மைப்படுத்தி கிணற்றை சுற்றி பாதுகாப்பு இரும்பு வளையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளனர் .

Similar News