சேலம் மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் செவ்வாய்பேட்டை நரசிம்மன் ரோடு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜெயராம் தியேட்டர் பஸ் நிறுத்தம் பகுதியில் கஞ்சா விற்றதாக சிவதாபுரத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 21), நெத்திமேடு காமராஜ் நகரை சேர்ந்த விஜய கணபதி (21), கிச்சிப்பாளையம் நாராயணநகரை சேர்ந்த சந்தோஷ் குமார் (25) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.