பரமத்திவேலூரில் விவசாயிகளுக்கு 3 ஜி கரைசல், செயல்விளக்க பயிற்சி.
விவசாயிகளுக்கு 3 ஜி கரைசல், செயல்விளக்க பயிற்சி மாணிக்க நத்தம் கிராமத்தில் நடைபெற்றது.;
பரமத்திவேலூர், ஏப்.13: பரமத்திவேலூர் தாலுகா பரமத்தியில் வட்டாரத்தில் உள்ள மாணிக்கநத்தம் கிராமத்தில் விவசாயிகளுக்கு 3ஜி கரைசல், நீமாஸ்த்ரா ஆகியவை அடங்கிய தயாரிப்பு மற்றும் செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. கிராம தங்கல் திட்டத்தின் கீழ், நாமக்கல் பி.ஜி.பி. வேளாண்மை கல்லூரி மாணவிகள் செயல்முறை விளக்கங்கள் அளித்தனர். பரமத்தி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் மாணிக்கநத்தம் கிராமத்தில் விவசாயிகளுக்கு இப்பயிற்சி மற்றும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இவற்றை பயன்படுத்துவதால் பூச்சிகளின் தொல்லை இருக்காது. இதுபோல் பல்வேறு செயல்விளக்க பயிற்சி முறைகளாலும் விழிப்புணர்வு அறிவுரைகள் மூலமாகவும் விவசாயிகள் பயனடைந்தனர்.