வாழப்பாடியில் தொழிலாளர்களை தாக்கிய 3 பேர் கைது

போலீசார் நடவடிக்கை;

Update: 2025-05-20 03:28 GMT
பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரமோத் யாதவ் (வயது 35). இவர் சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சேத்துக்குட்டை இரும்பு உருக்காலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் வெள்ளாள குண்டம் சென்று விட்டு உருக்காலைக்கு சைக்கிளில் திரும்பி உள்ளார். அப்போது எதிரே வந்த வெள்ளாளகுண்டம் பகுதியை சேர்ந்த கொத்தனார் தினேஷ்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் பிரமோத் யாதவ் (35) கீழே விழுந்து காயம் அடைந்தார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இந்நிலையில் தினேஷ்குமாருடன் வேலை செய்யும் சக நண்பர்கள் ரங்கசாமி (34), வெங்கடேசன் (33), தேவன் (24) ஆகியோர் வடமாநில தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதை தட்டிக்கேட்ட மேலும் 2 வடமாநில தொழிலாளர்களும் தாக்கப்பட்டனர். இதுதொடர்பாக வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமார், ரங்கசாமி, வெங்கடேசன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். தேவனை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News