செங்குணம் மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவின் 3 வது நாளில் சிங்க வாகனத்தில் அம்மன் திருவீதியுலா

28 அன்று திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறு.கிறது. திருவிழாவிற்கான பல்வேறு முன்னேற்பாடு பணிகளை கோவில் நிர்வாகிகள், இளைஞர்கள், பொதுமக்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.;

Update: 2025-07-24 04:20 GMT
பெரம்பலூர் அருகே செங்குணம் மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவின் 3 வது நாளில் சிங்க வாகனத்தில் அம்மன் திருவீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் வட்டம் செங்குணம் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழாவை முன்னிட்டு ஜூலை 21 அன்று முதல் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. சூலை 23 நேற்று இரவு ஆலயத்தில் அம்மனுக்கு மண்டல பூஜையுடன் தீபாதாரணை காண்பிக்கப்பட்டு வான் வேடிக்கை மற்றும் கலை நிகழ்ச்சியுடன் சிங்க வாகனத்தில் 3 வது நாளாக அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று. நிகழ்ச்சியில் பக்தர்கள் சாமியை தரிசனம் செய்து வணங்கி மகிழ்ந்தனர். வரும் 28 அன்று திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறு.கிறது. திருவிழாவிற்கான பல்வேறு முன்னேற்பாடு பணிகளை கோவில் நிர்வாகிகள், இளைஞர்கள், பொதுமக்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

Similar News