காஞ்சிபுரத்தில் 3 இடங்களில் புதிய மின்மாற்றி அமைப்பு

குறைந்த மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு 3 இடங்களில் புதிய மின்மாற்றி அமைப்பு;

Update: 2025-07-28 11:05 GMT
காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட வையாவூர் பிரதான சாலை, லிங்கா நகர், மூவேந்தர் நகர், பரஞ்ஜோதி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. குறைந்த மின்னழுத்தம் காரணமாக இப்பகுதி வீடுகளில் மின்சாதனங்களை இயக்குவதில் பிரச்னை ஏற்பட்டு வந்தது. அப்பகுதியில் வசிப்போர், புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசனிடம் புகார் மனு அளித்தனர். இதையடுத்து, காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டம், வடக்கு கோட்டம் சார்பில், லிங்கா நகரில், 100 கே.வி.ஏ., மூவேந்தர் நகரில், 63 கே.வி.ஏ., பரஞ்ஜோதி நகரில் 25 கே.வி.ஏ., திறன் கொண்ட மின்மாற்றிகள் அமைக்கப்பட்டன. காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், நேற்று புதிய மின்மாற்றிகளை இயக்கி வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் ஒன்றிய சேர்மன் மலர்கொடி மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

Similar News