தென்காசி கரடி தாக்கியதில் 3 பெண்கள் படுகாயம்
கரடி தாக்கியதில் 3 பெண்கள் படுகாயம்;
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள விவசாய நிலத்தில் இன்று காலை விவசாய பணிக்காக சென்ற ஷேகம்மாள் (52) அம்பிகா(40) ராமலட்சுமி(46) என்ற 3 பெண்கள் விவசாய வேலை செய்து இருந்தனர். அங்கு பதுங்கி இருந்த கரடி தாக்கியதில் 4 பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த புளியங்குடி காவல் துறையினர் அங்கு சென்று காயமடைந்த பெண்களை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அப்பகுதியை சுற்றித் திரியும் கரடிகளை வனத்துறையினர் பார்வையிட்டு விரட்டி அடிக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்களுக்கு விவசாயிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.