நாகர்கோவிலில் நடைபெற்ற இலக்கியப் பட்டறையின் 162 வது கூடுகையில் மூன்று நூல்களின் ஆய்வரங்கம் பட்டறை தலைவர் தக்கலை பென்னி தலைமையில் நடைபெற்றது. எழுத்தாளர்கள் உஷா தேவி, இனியன் தம்பி, ஆபிரகாம் லிங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் ஆகிரா அனைவரையும் வரவேற்றார். ஆய்வரங்க நிகழ்விற்கு பாளையங்கோட்டை புனித சவேரியார் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் டேவிட் அப்பாதுரை நெறியாளராக செயல்பட்டார். மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவி ஷர்மிளா தேவி எழுதிய நிலவை நனைத்த முகம் என்ற கவிதை நூலை ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் முனைவர் சுரேஷ் டேனியல் ஆய்வு செய்து பேசினார். ரோஜாவனம் சர்வதேச பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஹேன்சி எழுதிய "மை டையரி" என்கிற ஆங்கில கவிதை நூலை எழுத்தாளர் சப்திகாவும் மாணவி சஞ்சனாவும் ஆய்வு செய்து பேசினர். அருட்பணியாளர் டைட்டஸ் மோகன் எழுதிய அன்புள்ள அப்பாவுக்கு நூலை எழுத்தாளர் விஜி பூர்ண சிங் ஆய்வு செய்து பேசினார். நிறைவாக நூலாசிரியர்கள் ஏற்புரையும் நன்றியுரையும் வழங்கினர். இலக்கியப் பட்டறை நிறுவனர் குமரி ஆதவன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நிகழ்வில் அருட்பணியாளர் ஜோசப், வழக்கறிஞர் தெய்வநாயக பெருமாள், மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி பேராசிரியர் முனைவர் ஹேம்லின், எழுத்தாளர் ஆஸ்வால்ட் ஹோப்பர், வேள் உள்ளிட்ட ஏராளம் எழுத்தாளர்கள், வாசகர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.