பண்பொழியில் கட்டடப் பணியில் மண் சரிந்து 3 போ் காயம்

கட்டடப் பணியில் மண் சரிந்து 3 போ் காயம்;

Update: 2025-08-28 01:28 GMT
தென்காசி மாவட்டம் பண்பொழி பேரூராட்சி புதிய கட்டட அலுவலகக் கட்டுமான பணியில் மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த சுந்தரையா(60), சலீம்(55), சாமிராசா(55)ஆகியோா் ஈடுபட்டிருந்தனா். குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவா்கள் மீது திடீரென மண் சரிந்து விழுந்தது. இதில் அவா்கள் மண்ணுக்குள் சிக்கிக்கொண்டனா். வெளிப்புறத்தில் வேலைசெய்து கொண்டிருந்த சக பணியாளா்கள் வந்து மண்ணை அப்புறப்படுத்தி, காயமுற்றிருந்த 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து அச்சன்புதூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். .

Similar News