பழநி முருகன் கோயில் திருகார்த்திகை தீபத் திருவிழா நாளை காப்பு கட்டுதல் உடன் துவங்கி டிசம்பர்- 3 வரை நடக்கிறது

பழனி முருகன் கோவிலில் கார்த்திகை திருவிழா;

Update: 2025-11-26 02:44 GMT
பழநி முருகன் கோயில் திருகார்த்திகை தீபத் திருவிழா நாளை காப்பு கட்டுதல் உடன் துவங்கி டிசம்பர்- 3 வரை நடக்கிறது திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நாளை (நவம்பர்-27) மாலை 5:30 மணிக்கு சாயரட்சை பூஜையில் காப்பு கட்டுதல் உடன் கார்த்திகை தீப திருவிழா துவங்குகிறது. டிசம்பர்-2 மாலை 5:30 மணிக்கு சாயரட்சை பூஜையில் பரணி தீபம் ஏற்ற சண்முகர் அர்ச்சனை, டிசம்பர்- 3 மஹா கார்த்திகை தினத்தை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், கோயிலில் நான்கு மூலைகளில் தீபம் ஏற்றப்படுகிறது. அதன் பின் 6:00 மணிக்கு திருகார்த்திகை தீபம், சொக்கப்பனை ஏற்றுதல் நடைபெறும். திருகார்த்திகை முன்னிட்டு டிச. 3 ல் தங்கரத புறப்பாடு நடைபெறாது.

Similar News