சேலத்தில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் உள்பட 4 பேர் கைது

போலீசார் நடவடிக்கை;

Update: 2025-04-06 08:17 GMT
சேலத்தில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் உள்பட 4 பேர் கைது
  • whatsapp icon
சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு, மாநகர் பகுதியில் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அர்த்தனாரி தலைமையில் போலீசார் மூணாங்கரடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 2 வாலிபர்கள் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிந்தது. அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கொண்டலாம்பட்டியை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் விஜய் (வயது 26), தாதகாப்பட்டியை சேர்ந்த முத்துராமன் மகன் சாரதி (22) என்பது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கிச்சிப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார், போலீசார் கிச்சிப்பாளையம் குப்பைமேடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (52) என்பவரை போலீசார் கைது செய்தனர். அழகாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் போலீசார் அழகாபுரம் மைதானம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்ற சிவா (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Similar News