உயர்கல்வி பயிற்சி - மார்ச் 30ம் தேதி
ஆதிதிராவிடர், பழங்குடி மாணவர்களுக்கு;

குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடப்பு கல்வியாண்டில் 12ம் வகுப்பு பயின்ற மாணாக்கர்களுக்கான ‘என் கல்லூரிக் கனவு’ உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியானது நாகர்கோவில், வடசேரி, மாடரேட்டர் ஞானதாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து மார்ச் 30ம் தேதி அன்று காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது. எனவே கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற வகுப்பின மாணாக்கர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.