காரில் 30 கிலோ குட்காவுடன் வந்தவர் கைது.
மதுரை திருமங்கலம் அருகே 30 கிலோ குட்காவுடன் ஒருவர் பிடிபட்டார்.;
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மேலக்கோட்டை விலக்கில் திருமங்கலம் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் பேச்சிமுத்து பாண்டியன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம்( ஏப்.12) இரவு வாகன சோதனையில் ஈடுபட்ட போது அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டபோது அதில் அரசு தடை செய்த 30 கிலோ புகையிலை பொருட்கள், குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் காரை ஓட்டி வந்த பேரையூரை சேர்ந்த ஆசைதம்பியை (47) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.